TNPSC Thervupettagam

இந்தியாவின் நிலச்சரிவு குறித்த தகவல் அறிக்கை

March 18 , 2023 888 days 392 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) கீழ் செயல்படும், ஹைதராபாத்தில் அமைந்துள்ள தேசியத் தொலை உணர்வு மையமானது (NRSC) இந்தியாவின் இந்தியாவின் நிலச்சரிவு குறித்தத் தகவல் அறிக்கையினை வெளியிட்டு உள்ளது.
  • 17 மாநிலங்கள் மற்றும் இரண்டு ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள நிலச்சரிவினால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய 147 மாவட்டங்களின் பட்டியலை இந்தக் குழு வெளியிட்டு உள்ளது.
  • உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மற்றும் தெஹ்ரி கர்வால் ஆகிய மாவட்டங்கள் நாட்டிலேயே அதிகளவில் நிலச்சரிவினால் பாதிக்கப்படும் பகுதிகளைக் கொண்டதாகவும், அதிகளவில் நிலச்சரிவு அபாயத்திற்கு உட்படக் கூடியதாகவும் உள்ளன.
  • நிலச்சரிவு நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்ற உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் பகுதி அமைந்துள்ள சமோலி மாவட்டமானது 19வது இடத்தைப் பிடித்து உள்ளது.
  • ஹரித்வார் மற்றும் உதம் சிங் நகர் ஆகியவை முறையே 146வது மற்றும் 147வது இடங்களில் உள்ளன.
  • உத்தரகாண்ட் தவிர, நிலச்சரிவினால் அதிகம் பாதிக்கப்படும் 10 மாவட்டங்களில், கேரளாவின் நான்கு மாவட்டங்களும், ஜம்மு காஷ்மீரில் இரண்டு மாவட்டங்களும், சிக்கிமில் இரண்டு மாவட்டங்களும் இதில் வெள்ளப் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் அமைந்துள்ளன.
  • இமயமலைக்கு அடுத்தபடியாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியானது நிலச்சரிவு அதிகம் ஏற்படும் பகுதியாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்