2070 ஆம் ஆண்டிற்குள் இந்தியா புதைபடிம எரிபொருளைச் சார்ந்திராமல் திறம்படச் செயல்படுதல் மற்றும் பொருளாதாரத்திற்கு ஆற்றல் அளிப்பதற்குப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை இந்தியா சார்ந்திருப்பதை துரிதப்படுத்துதல் போன்ற கிளாஸ்கோவில் இந்தியா அளித்த உறுதிமொழிகளை இந்தியா அங்கீகரித்துள்ளது.
இருப்பினும், இந்திய நாட்டினால் அங்கீகரிக்கப்பட்ட உறுதிமொழிகள், அது உறுதி அளித்தவற்றை விட குறைவாகவே இருந்தன.
5 உறுதிப்பாடுகள்
2030 ஆம் ஆண்டிற்குள், இந்தியா தனது புதைபடிமம் சாரா ஆற்றல் திறனை 500 GW ஆக உயர்த்தும்.
2030 ஆம் ஆண்டிற்குள், இந்தியா தனது ஆற்றல் தேவைகளில் 50 சதவீதத்தினைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பூர்த்தி செய்யும்.
இந்தியா தற்போது முதல் 2030 ஆம் ஆண்டு வரை மொத்த கரியமில (கார்பன்) வாயு உமிழ்வினை 1 பில்லியன் டன்கள் வரை குறைக்கும்.
இந்தியா தனது கார்பன் செறிவினை, 2030 ஆம் ஆண்டிற்குள் 2005 ஆம் ஆண்டின் அளவில் இருந்து 45 சதவீதத்திற்கும் அதிகமான அளவு குறைக்கும்.
ஆற்றல் மூலங்களிலிருந்து வெளியாகும் நிகர கார்பன்டை ஆக்சைடு உமிழ்வானது 2070 ஆம் ஆண்டிற்குள் நிறுத்தப்படும், அல்லது, இந்தியா ‘நிகர சுழிய’ உமிழ்வு என்ற இலக்கை எட்டும்.