TNPSC Thervupettagam

இந்தியாவின் பாதுகாப்புத் துறை உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகள்

December 1 , 2025 4 days 48 0
  • இந்தியாவின் பாதுகாப்பு துறை உற்பத்தி ஆனது 202425 ஆம் நிதியாண்டில் 1.54 லட்சம் கோடி ரூபாயை எட்டியது.
  • 201415 ஆம் நிதியாண்டில் 46,429 கோடி ரூபாயாக இருந்த உள்நாட்டுப் பாதுகாப்பு துறை உற்பத்தி 202324 ஆம் நிதியாண்டில் 174% அதிகரித்து 1,27,434 கோடி ரூபாயாக இருந்தது.
  • 2014 ஆம் ஆண்டில் சுமார் 1,000 கோடி ரூபாய்க்கும் குறைவாக இருந்த பாதுகாப்புத் துறையின் ஏற்றுமதி 202425 ஆம் நிதியாண்டில் 23,622 கோடி ரூபாயாக உயர்ந்தது.
  • பாதுகாப்புத் துறை சார் பொதுத்துறை நிறுவனங்கள் (DPSUs) உற்பத்தியில் 77% பங்களித்தன என்ற நிலையில் தனியார் துறை 23% பங்களித்தது.
  • உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பாதுகாப்புத் தொழில்துறை வழித்தடங்கள் சுமார் 9,145 கோடி ரூபாய் முதலீடுகளையும் 289 புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் (MoUs) ஈர்த்தன.
  • 2029 ஆம் ஆண்டிற்குள் பாதுகாப்புத் துறை உற்பத்தியில் 3 லட்சம் கோடி ரூபாயையும் ஏற்றுமதியில் 50,000 கோடி ரூபாயையும் அடைய அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்