இந்தியாவின் பால் உற்பத்தி
February 12 , 2023
876 days
429
- 2021-22 ஆம் ஆண்டில், உலகப் பால் உற்பத்தியில் 24 சதவீதப் பங்களிப்பை வழங்கி உலகிலேயே அதிக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது.
- உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் பெரு நிறுவனப் புள்ளி விவரங்கள் தரவுத் தளத்தின் (FAOSTAT) உற்பத்தி குறித்த தரவுகளின் படி இது கூறப்படுகிறது.
- 2014-15 மற்றும் 2021-22 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவானது தனது பால் உற்பத்தியில் 51 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.
- இது 2021-22 ஆம் ஆண்டில் 22 கோடி டன்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- ஏற்கனவே இருந்த பின்வரும் மூன்று திட்டங்களை இணைத்து 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தேசியப் பால்வள மேம்பாட்டுத் திட்டம் ஆனது தொடங்கப்பட்டது
- முனைவுறு பால்வள மேம்பாட்டுத் திட்டம்
- தரமான மற்றும் தூய்மையான பால் உற்பத்திக்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் திட்டம் மற்றும்
- கூட்டுறவு நிறுவனங்களுக்கான உதவித் திட்டம்.

Post Views:
429