TNPSC Thervupettagam

இந்தியாவின் பால் துறை நிலை

October 3 , 2025 16 days 56 0
  • உலகின் முன்னணிப் பால் உற்பத்தியாளராக உள்ள இந்தியா, உலகளாவியப் பால் விநியோகத்தில் சுமார் 25 சதவீதப் பங்களிப்பை வழங்குகிறது.
  • பால் உற்பத்தியானது கடந்த 10 ஆண்டுகளில் 63.56 சதவீதம் அதிகரித்து, 2023–24 ஆம் ஆண்டில் 146.3 மில்லியன் டன்னிலிருந்து 239.3 மில்லியன் டன்னாக உயர்ந்தது.
  • தனிநபர் பால் கிடைக்கும் தன்மையானது 48 சதவீதம் அதிகரித்து, ஒரு நாளைக்கு 471 கிராமாக உயர்ந்துள்ளது, இது உலக சராசரியை விட அதிகமாகும்.
  • பால் உற்பத்தித் துறையானது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ளது என்பதோடு இது 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது.
  • ஸ்ரீஜா பால் உற்பத்தி அமைப்பு ஆனது, பெண்கள் அதிகாரமளித்தலுக்காக சிகாகோவில் பால் துறைக்கான புதுமை விருதை வென்றது.
  • 2024–25 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 565.55 லட்சம் செயற்கை கருவூட்டல்கள் (AI) மேற்கொள்ளப்பட்டன.
  • இந்தியாவில் 22 பால் கூட்டமைப்புகள், 241 மாவட்டத் தொழிற்சங்கங்கள் மற்றும் 25 பால் உற்பத்தி அமைப்புகள் உள்ளன.
  • வெண்மைப் புரட்சி 2.0 ஆனது, 2028–29 ஆம் ஆண்டிற்குள் 75,000 புதியக் கூட்டுறவு சங்கங்களையும், தற்போதுள்ள 46,422 கூட்டுறவுச் சங்கங்களை மேம்படுத்துவதையும் இலக்காகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்