இந்தியாவின் பிராந்தியக் கட்சிகளுக்கான நிதி மூலங்கள் 2021-22
May 21 , 2023 735 days 325 0
மக்களாட்சிச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) ஆனது “2021-22 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பிராந்திய அரசியல் கட்சிகளின் நிதி மூலங்களின் பகுப்பாய்வு” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
2021-22 நிதியாண்டில் இந்தியாவின் 27 பிராந்திய அரசியல் கட்சிகளின் வருமானத்தில் 75%க்கும் அதிகமான வருமானமானது, அதாவது 887.55 கோடி ரூபாயானது அறியப் படாத மூலங்களிலிருந்துப் பெறப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டு அறியப்படாத மூலங்களிலிருந்துப் பெறப்பட்ட இந்த வருமானத்தின் விகிதம் சுமார் 50% ஆகும்.
தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான தி.மு.க., 96.01% என்ற அளவில் அதிக அளவு வருவாய்ப் பங்கினை அறியப் படாத மூலங்களிலிருந்துப் பெற்றுள்ளது.