TNPSC Thervupettagam

இந்தியாவின் புதிய அரசியல் வரைபடம்

November 4 , 2019 2088 days 889 0
  • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை மறுசீரமைத்தப் பின்னர் இந்தியாவின் புதிய அரசியல் வரைபடத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • இந்தியாவின் புதிய வரைபடம் 28 மாநிலங்களையும் 9 யூனியன் பிரதேசங்களையும் கொண்டுள்ளது.
  • இந்தியாவின் இந்த இரண்டு புதிய யூனியன் பிரதேசங்களும் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று முறையாக நடைமுறைக்கு வந்தன.
  • 2019 ஆம் ஆண்டு நவம்பர் 02 அன்று, புதிய யூனியன் பிரதேசங்களின் வரைபடம் வெளியிடப் பட்டது.
  • புதிய வரைபடத்தின்படி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மீர்பூர் மற்றும் முசாபராபாத் ஆகிய மாவட்டங்கள் ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதியாக விவரிக்கப் பட்டுள்ளன.
  • இந்த இரண்டு மாவட்டங்களுடன் சேர்த்து ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் 22 மாவட்டங்கள் இருக்கும்.
  • இந்த வரைபடமானது இந்தியக் கள ஆய்வு இயக்குனரால் தயாரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்