இந்தியாவின் புதிய எரிபொருள் கலப்பு எரிப்புக் கொள்கை
December 14 , 2025 3 days 45 0
நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்களில் (TPPs) உயிரி பொருட்களின் துகள்கள் மற்றும் நகராட்சி திடக்கழிவு (MSW) அடிப்படையிலான எரிக்கப்பட்ட கரியை இணைந்து எரிப்பதை கட்டாயமாக்கும் புதிய கொள்கையை மத்திய மின்சாரத் துறை அமைச்சகம் வெளியிட்டது.
உமிழ்வைக் குறைப்பதற்கும் தூய்மை இந்தியா திட்டத்தை ஆதரிப்பதற்கும் உபரி வேளாண் எச்சங்கள் மற்றும் முறையாக கையாளப்படாத MSW கழிவினைப் பயன்படுத்துவதை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
டெல்லியின் தேசியத் தலைநகரப் பகுதியில் உள்ள TPP நிலையங்கள் 2025–26 ஆம் ஆண்டு முதல் 5% உயிரிப் பொருட்களின் துகள்கள் மற்றும் 2% MSW கரியைக் கலந்து எரிக்க வேண்டும், அதே நேரத்தில் மற்ற ஆலைகள் 5% உயிரிப் பொருட்களின் துகள்கள் அல்லது MSW கரியை இணைந்து எரிக்க வேண்டும்.
இந்தக் கொள்கை, எரிசக்தி கட்டண விகிதத்தின் கீழ் கூடுதல் எரிபொருள் செலவுகளை கட்டணமாகச் செலுத்த அனுமதிக்கிறது மற்றும் ஒவ்வொரு நிகழ்விற்குமான விலக்குகளை வழங்குகிறது.