நீதிபதி உதய் உமேஷ் லலித் இந்தியாவின் 49வது தலைமை நீதிபதியாக 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதியன்று பதவியேற்றார்.
டெல்லி ராஷ்டிரபதி பவனில், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் இவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இவர் நீதிபதியாக பதவி உயர்த்தப்படுவதற்கு முன்பு, உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
இந்தியத் தலைமை நீதிபதியாக நியமனக் குழுவினால் நேரடியாக நியமிக்கப்பட்ட இரண்டாவது நபர் இவர் ஆவார்.
இவர் 2022 ஆம் ஆண்டு நவம்பர் 08 ஆம் தேதியன்று (74 நாட்களுக்குள்) ஓய்வு பெற உள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கான வழக்குகளைப் பட்டியலிடுவது மற்றும் அவசரமான விஷயங்களைக் குறிப்பிடுவது, உச்ச நீதிமன்றத்தில் குறைந்தபட்சம் ஒரு அரசியலமைப்பு அமர்வு ஆண்டு முழுவதும் செயல்படுவது ஆகியவற்றை அவர் உறுதி செய்தார்.
2017 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் 55,000 ஆக இருந்த நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையானது, 71,000 என்ற எண்ணிக்கையைக் கடந்த நேரத்தில் நீதிபதி லலித் அவர்களின் பதவியேற்பு நிகழ்ந்துள்ளது.
நீதிபதி S.M.சிக்ரி 1971 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 13வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
1964 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உச்ச நீதிமன்ற அமர்வுக்கு நேரடியாக பதவி உயர்த்தப் பட்ட முதல் வழக்கறிஞர் இவரே ஆவார்.