குரு காசிதாஸ் தேசியப் பூங்கா மற்றும் தமோர் பிங்க்லா வனவிலங்குச் சரணாலயம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பகுதிகளை புலிகள் காப்பகமாக அறிவிப்பதற்கான சத்தீஸ்கர் அரசின் முன்மொழிதலுக்கு சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கு தேசியப் புலிகள் வளங்காப்பு ஆணையத்தினால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தப் புதிய காப்பகமானது மத்தியப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுடன் ஒட்டிய அம்மாநில எல்லையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
இது சத்தீஸ்கர் மாநிலத்தின் 4வது புலிகள் காப்பகமாகத் திகழும்.
இந்த மாநிலத்திலுள்ள மற்ற 3 புலிகள் காப்பகங்களாவன; உதன்டி-சித்தனடி, அச்சனகுமார் மற்றும் இந்திராவதி காப்பகங்கள் ஆகியனவாகும்.
குரு காசிதாஸ் தேசியப் பூங்காவானது நாட்டில் ஆசியச் சிறுத்தைகள் கடைசியாகக் காணப்பட்ட வாழ்விடமாக இருந்தது.