இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன்
July 28 , 2026 3 days 63 0
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன் 288 ஜிகாவாட் (GW) ஆக உள்ளது.
2014-ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன் கிட்டத் தட்ட நான்கு மடங்கு அதிகரித்து 288.58 ஜிகாவாட்டை எட்டியுள்ளது.
2014-ஆம் ஆண்டில் 76.38 ஜிகாவாட்டாக இருந்த இத்திறன், 2026 ஆம் ஆண்டு ஜூன் 30 நிலவரப்படி கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனில் சூரிய ஆற்றல் 162.15 ஜிகாவாட் அளவோடு மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து காற்றாலை ஆற்றல் (57.44 ஜிகாவாட்), நீர்மின் ஆற்றல் (57.24 ஜிகாவாட்) மற்றும் உயிரி ஆற்றல் (11.75 ஜிகாவாட்) ஆகியவை உள்ளன; இதில் 8.78 ஜிகாவாட் அணுசக்தித் திறனும் அடங்கும்.
புதைபடிவ எரிபொருள் சாராத மின் உற்பத்தித் திறனில் இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட திறன் 297.36 ஜிகாவாட்டை எட்டியுள்ளது.