இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்டப் பங்களிப்பு
August 6 , 2022 1081 days 489 0
இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்டப் பங்களிப்பிற்கு (NDC) மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
பாரீஸ் ஒப்பந்தத்தின் படி, பருவநிலை மாற்றத்திற்கான உலகளாவிய நடவடிக்கைகளை வலுப்படுத்துவதில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது குறைவான உமிழ்வு என்ற இலக்கின் முன்னேற்றப் பாதைகளில் இந்தியாவை அழைத்துச் செல்ல உதவும்.
புதுப்பிக்கப்பட்ட NDC ஆனது, பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டு அமைப்பிற்கு மாற்றப்படும்.
இந்த புதுப்பிப்பானது 2070 ஆம் ஆண்டிற்குள் நிகரச் சுழிய நிலையை அடைதல் என்ற நாட்டின் நீண்ட கால இலக்கை அடைவதற்கான ஒரு செயல்நிலைப் படியாகும்.
புதுப்பிக்கப்பட்ட தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பின் படி, 2005 ஆம் ஆண்டின் அளவை ஒப்பிடுகையில், 2030 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் உமிழ்வுச் செறிவினை 45% ஆக குறைக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது.