நிதி ஆயோக் அமைப்பானது "Deepening the Corporate Bond Market in India" என்ற அறிக்கையை புது டெல்லியில் வெளியிட்டது.
இந்த அறிக்கையானது, சந்தை அணுகலை விரிவுபடுத்துதல், பணப்புழக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் இந்தியாவின் பெரு நிறுவனப் பத்திரச் சந்தையில் முதலீட்டாளர்களின் பங்களிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நீண்ட கால நிதியுதவி மற்றும் விக்சித் பாரத் @2047 இலக்கை அடைவதற்கு வலுவான பத்திரச் சந்தை அவசியமாகக் கருதப்படுகிறது.
தற்போதையச் சவால்களில் வரையறுக்கப்பட்டச் சந்தைப் பரவல், அதிக எண்ணிக்கையிலான முதலீட்டாளர்கள் மற்றும் பலவீனமான இரண்டாம் நிலை சந்தைச் செயல்பாடு ஆகியவை அடங்கும்.
இதன் பரிந்துரைகளில் ஒழுங்குமுறைச் சீர்திருத்தங்கள், பன்முகப்படுத்தப்பட்ட பத்திரத் தயாரிப்புகள், நிலைத்தன்மையுடன் இணைக்கப்பட்ட கருவிகள் மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் ஆகியவை அடங்கும்.
உள்கட்டமைப்பு, MSME நிறுவனங்கள் மற்றும் பசுமை மாற்றத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கான வாய்ப்புகளை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.