2025 ஆம் ஆண்டில், 4.18 டிரில்லியன் டாலர் மதிப்பிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (GDP) இந்தியா ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.
அதிகாரப்பூர்வக் கணிப்புகள் ஆனது மதிப்பிடப்பட்ட 7.3 டிரில்லியன் டாலர் GDP மதிப்பினை எட்டி, இந்தியா 2030 ஆம் ஆண்டில் ஜெர்மனியை விஞ்சி மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்பதைக் குறிக்கிறது.
2025–26 ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், வலுவான தொழில்துறை உற்பத்தி மற்றும் சேவைத் துறை விரிவாக்கத்தின் ஆதரவுடன் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.2 சதவீதத்தினை எட்டியது என்பதோடுஇது கடந்த ஆறு காலாண்டுகளில் மிக உயர்ந்த அளவைக் குறிக்கிறது.
உள்நாட்டுத் தேவைகள், குறிப்பாக தனியார் நுகர்வு, இந்த வளர்ச்சியின் முக்கிய உந்துதலாக உள்ளது என்பதோடுஇதற்குக் குறைந்து வரும் வேலைவாய்ப்பின்மை மற்றும் நிலையான நிதி நிலைமைகள் ஆதரவாக அமைந்தன.
வருமான வரி மற்றும் சரக்குகள் & சேவை வரி (GST) பகுத்தறிவு, ஆதரவான பணவியல் நிலைமைகள் மற்றும் அரசாங்க மூலதனச் செலவினம் உள்ளிட்ட கொள்கைச் சீர்திருத்தங்கள் ஆனது பொருளாதார உந்துதலை வலுப்படுத்தியுள்ளன.
அதிக வளர்ச்சி மற்றும் குறைந்த பணவீக்கத்தின் "சமநிலை காலம்" என்று விவரிக்கப் படும் சாதகமான பருப் பொருளாதார சூழலுடன், 2047 ஆம் ஆண்டிற்குள் உயர் நடுத்தர வருமான நிலையை அடைவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.