இந்தியாவின் மகிழ்ச்சி அறிக்கை
October 2 , 2020
1769 days
718
- நாட்டில் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் மகிழ்ச்சியை அளவிடும் முதலாவது அகில இந்திய மகிழ்ச்சி அறிக்கை இதுவாகும்.
- இந்த மகிழ்ச்சி அறிக்கையில் மிசோரம், பஞ்சாப், அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் முதல் 3 இடத்தைப் பிடித்துள்ளன.
- இதில் பெரிய மாநிலங்கள் பிரிவில் பஞ்சாப், குஜராத் மற்றும் தெலுங்கானா ஆகியவை முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன.
- இந்த மகிழ்ச்சித் தரவரிசையில் சிறிய மாநிலங்கள் பிரிவில் மிசோரம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகியவை முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன.
- இதில் ஒன்றியப் பிரதேசங்களான அந்தமான் நிக்கோபர் தீவுகள், புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு ஆகியவை முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன.
- இதில் தமிழ்நாடு 29வது இடத்திலும் சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் உத்தரகாண்ட் ஆகியவை கடைசி இடங்களிலும் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
Post Views:
718