TNPSC Thervupettagam

இந்தியாவின் மக்கள் தொகை மற்றும் கருவுறுதல் விகிதம்

June 16 , 2025 19 days 85 0
  • '2025 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை குறித்த நிலை' (SOWP) என்ற அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA)வெளியிட்டுள்ளது.
  • இந்தியா தற்போது சுமார் 1.46 பில்லியன் மக்கள் தொகையுடன் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது.
  • இந்த ஒரு எண்ணிக்கையானது தற்போதிலிருந்து சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு குறையத் தொடங்குவதற்கு முன்னதாக, சுமார் 1.7 பில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • பிறப்பு விகிதம் குறைந்து வந்தாலும், இந்தியாவின் இளையோரின் மக்கள் தொகை குறிப்பிடத் தக்க அளவில், 0 முதல் 14 வயதுப் பிரிவில் 24% ஆகவும், 10 முதல் 19 வயதுப் பிரிவில் 17% ஆகவும், மற்றும் 10 முதல் 24 வயதுப் பிரிவில் 26% ஆகவும் உள்ளது.
  • நாட்டின் மக்கள்தொகையில் 68% பேர் உழைக்கும் வயதிலானவர்களாக உள்ளனர் (15 முதல் 64 வயது).
  • இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதமானது ஒரு பெண்ணுக்கு 1.9 பிறப்புகளாகக் குறைந்துள்ளது என்பதோடு இது 2.1 என்ற மாற்றீடு நிலைக்குக் கீழே குறைந்துள்ளது.
  • அதாவது, மிகச் சராசரியாக, இந்தியப் பெண்கள் புலம்பெயர்வினை சேர்க்காமல், ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு அதே அளவில் மக்கள்தொகையினைப் பேணுவதற்குத் தேவையானதை விட குறைவான குழந்தைகளைப் பெற்றுள்ளனர்.
  • 1960 ஆம் ஆண்டில், இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 436 மில்லியனாக இருந்த போது, ​ஒரு சராசரி பெண்ணுக்கு சுமார் ஆறு குழந்தைப் பிறப்புகள் பதிவாகின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்