TNPSC Thervupettagam

இந்தியாவின் மராத்திய இராணுவ நிலப்பரப்புகள்

February 6 , 2024 538 days 477 0
  • 2024-25 ஆம் ஆண்டிற்கான யுனெஸ்கோ அமைப்பின் உலக பாரம்பரிய பட்டியலில் 'மராத்திய இராணுவ நிலப்பரப்புகளை' சேர்ப்பதற்குப் பரிசீலிக்குமாறு கலாச்சாரத் துறை அமைச்சகம் கோரிக்கை வைத்துள்ளது.
  • இது இந்த அறிக்கை மொத்தம் 12 கட்டமைப்புகளை உள்ளடக்கியது.
  • மகாராஷ்டிராவில் உள்ள சல்ஹேர் கோட்டை, ஷிவ்னேரி கோட்டை, லோகாட், கந்தேரி கோட்டை, ராய்காட், ராஜ்காட், பிரதாப்காட், சுவர்ணதுர்க், பன்ஹாலா கோட்டை, விஜய் துர்க், சிந்துதுர்க் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள செஞ்சிக் கோட்டை போன்ற வரலாற்று நினைவுச் சின்னமாக விளங்கும் கோட்டைகள் இதில் அடங்கும்.
  • மராத்திய இராணுவக் கருத்தாக்கத்தின் ஆரம்பம் ஆனது 1670 ஆம் ஆண்டில் மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் ஆட்சியின் போது தொடங்கி 1818 ஆம் ஆண்டு வரையிலான பேஷ்வா ஆட்சி வரை தொடர்ந்து நீடித்தன.
  • தற்போது, இந்தியாவில் 42 உலகப் பாரம்பரியத் தளங்கள் உள்ள நிலையில் இதில் 34 கலாச்சாரத் தளங்கள், ஏழு இயற்கைத் தளங்கள் மற்றும் ஒரு கலப்புத் தளம் ஆகியன உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்