இந்தியாவின் மருந்து மற்றும் மருத்துவச் சாதனங்கள் துறையில் மாற்றம்
February 4 , 2026 14 hrs 0 min 12 0
இந்தியாவின் மருந்துத் தொழில், சிக்கலான பொதுவான மருந்துகள், பயோசிமிலர்கள் மற்றும் புதுமைகளில் தனது கவனத்தைக் கூர்மையாக்கி வருகிறது.
குறைந்த விலையில் தடுப்பூசிகளை வழங்குவதில் இந்தியா ஒரு உலகளாவிய தலைவராக உள்ளது.
தற்போது, மதிப்பு அடிப்படையில் மருந்துப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா உலக அளவில் 11வது இடத்தில் உள்ளது என்பதோடுஇதன் உலகளாவியப் பங்கு 3 சதவீதமாக உள்ளது.
அளவு அடிப்படையில் உலகிலேயே மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளதுடன், உலகளாவிய பொதுவான மருந்துகளுக்கான தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்கிறது என்ற நிலையில் 2025 நிதியாண்டில் இது 191 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
இந்த ஏற்றுமதிகளில் பாதிக்கும் மேற்பட்டவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற கடுமையான ஒழுங்குமுறைச் சந்தைகளைக் கொண்ட நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.
பொதுவான மருந்துகளுக்கு அப்பால், உலகின் பெரும்பாலான டிபிடி, பிசிஜி மற்றும் தட்டம்மை தடுப்பூசிகளையும் இந்தியா வழங்கி வருகிறது.
இந்தியாவின் மருத்துவச் சாதனங்கள் துறையும் வேகமாக உலக அளவில் போட்டித்தன்மை கொண்டதாக மாறி வருகிறது என்பதோடு 2025 நிதியாண்டில் 187 நாடுகளுக்கு இது ஏற்றுமதி செய்கிறது.