இந்தியாவின் மிக உயரமான அனைத்து வானிலை மாற்றங்களையும் தாங்கக் கூடிய ஒரு நிரந்தரப் பாலம்
October 22 , 2019 2095 days 654 0
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் தளபதி செவாங் ரிஞ்சன் பாலம் எனப்படும் இந்தியாவின் மிக உயரமான அனைத்து வானிலை மாற்றங்களையும் தாங்கக் கூடிய ஒரு நிரந்தரப் பாலத்தைத் திறந்து வைத்தார்.
இது கிழக்கு லடாக்கில் சீனா-இந்தியா ஆகிய நாடுகளின் எல்லையிலிருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
ஷியோக் ஆற்றின் மீது அமைந்துள்ள 1400 அடி நீளமுள்ள இந்தப் பாலமானது வடக்கில் உள்ள துணைப் பிராந்தியத்தில் 14,650 அடி உயரத்தில் அமைந்துள்ளது. “லடாக்கின் சிங்கமான” தளபதி செவாங் ரிஞ்சனின் நினைவாக இப்பாலத்திற்கு இவரது பெயர் சூட்டப் பட்டுள்ளது.
நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த வீரதீர விருதான “மகாவீர் சக்ரா” என்ற விருது இரண்டு முறை வழங்கப்பட்ட ஆறு ஆயுதப் படை வீரர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
லேஹ் மற்றும் பார்தாபூர் பகுதியைப் பாதுகாப்பதில் இவருடைய சிறப்பான மற்றும் தைரியமான செயல்களுக்காக இவர் 'லடாக்கின் சிங்கம்' என்று அறியப் பட்டார்.