இந்தியாவின் மிக நீளமான இரயில் சுரங்கப்பாதை – உத்தரகாண்ட்
April 26 , 2025 4 days 86 0
14.58 கிலோ மீட்டர்கள் நீளம் கொண்ட இந்தியாவின் மிகவும் நீளமானப் போக்குவரத்து சுரங்கப் பாதையானது, சுரங்கப் பாதை எண். 8 அல்லது ஜனசு சுரங்கப் பாதை என்று அழைக்கப் படுகிறது.
இது ரிஷிகேஷ்-கர்ணபிரயாக் பாதையின் (உத்தரகாண்ட்) தேவ்பிரயாக் முதல் ஜனசு வரையிலான பகுதியில் அமைந்துள்ளது.
இந்த ரிஷிகேஷ்-கர்ணபிரயாக் ரயில் போக்குவரத்து இணைப்புப் பாதையானது 125.20 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.
இதில், 104 கி.மீ அல்லது 83 சதவீதப் பாதை சுரங்கப் பாதையாக உள்ளது.
தற்போது, இந்தியாவின் மிகவும் நீளமான இரயில் சுரங்கப் பாதையானது காஷ்மீர் பாதையின் கத்ரா-பனிஹால் பிரிவில் உள்ள காரி மற்றும் சம்பர் நிலையங்களுக்கு இடையில் உள்ள 12.75 கிலோ மீட்டர் நீளம் கொண்ட பாதையாகும்.
மணாலி-லே நெடுஞ்சாலையில் உள்ள சுமார் 9.02 கி.மீ நீளம் கொண்ட அடல் சுரங்கப் பாதையானது மிக நீளமான சாலைப் போக்குவரத்து சுரங்கப் பாதை ஆகும்.