அசாமின் துபிரி என்ற பகுதியை மேகலயாவின் புல்பரி என்ற பகுதிக்கு இணைக்கும் இந்தியாவின் மிக நீண்ட ஆற்றுப் பாலமானது பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே 2026-27ல் கட்டப்படவுள்ளது.
3 கி.மீ. நீளத்திற்கு 4 வழித்தடத்தையுடைய இந்தப் பாலமானது 203 கி.மீ. வழியான சாலைப் பயணத்தைக் குறைக்கும். இந்த புதிய பாலமானது அசாமில் இருந்து மேகலயா வரையிலான NH 127-Bயின் விடுபட்ட இணைப்பை நிறைவு செய்யும்.
2017-ல் பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட 9.15 கி.மீ. நீளமுடைய டோலா-சடியா பாலமானது தற்போது இந்தியாவின் நீண்ட ஆற்றுப் பாலமாகும்.