TNPSC Thervupettagam

இந்தியாவின் மிகப்பெரிய எஃகு ஆலை

November 5 , 2025 16 hrs 0 min 36 0
  • ஆந்திரப் பிரதேசத்தின் அனகப்பள்ளி மாவட்டத்தில், எந்தவொரு மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படாத இடத்திலான எஃகு ஆலையைக் கட்டமைப்பதற்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.
  • AM/NS இந்தியா நிறுவனமானது, ஆண்டிற்கு 8.2 மில்லியன் டன் (MTPA) திறன் கொண்ட ஊது உலையை உருவாக்கச் சுற்றுச்சூழல் ஒப்புதலையும் 2,200 ஏக்கர் நிலத்தையும் பெற்றுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில் இந்த நிறுவனம் 80,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது.
  • இந்த ஆலையின் செயல் திறன் ஆனது, பின்னர் மொத்தம் 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான முதலீட்டுடன் 24 MTPA ஆக விரிவுப்படுத்தப்படும்.
  • ஆர்செலர் மிட்டல் மற்றும் நிப்பான் ஸ்டீல் ஆகியவற்றின் கூட்டுத் துணிகர முதலீடான AM/NS இந்தியா, சத்தீஸ்கரில் உள்ள பைலாடிலா சுரங்கங்களில் இரும்புத் தாதுவை ஒரு நீர்மக் குழம்பு குழாய் மூலம் பெறுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்