இந்தியாவின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு தரவு மையம்
October 19 , 2025 33 days 103 0
இந்தியாவின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையம் ஆனது ஆந்திரப் பிரதேசத்தில் கட்டப்பட உள்ளது.
விசாகப்பட்டினத்தில் உள்ள கூகிளின் 1-ஜிகாவாட் (GW) அளவிலான மாபெரும் தரவு மையம் ஆனது மாநில அரசிற்கு 10,000 கோடி ரூபாய் வருவாயை ஈட்டும்.
இந்த மையமானது, இந்தியாவின் முதல் ஜிகாவாட் அளவிலான AI தரவு மையமாகவும், கூகிளின் முதல் AI மையமாகவும் இருக்கும்.
இந்தத் திட்டம் ஆந்திரப் பிரதேசத்தினை டிஜிட்டல் மையமாக நிலைநிறுத்துவதையும், இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் மாற்றத்தை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.