TNPSC Thervupettagam

இந்தியாவின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை

July 28 , 2025 14 days 59 0
  • L&T நிறுவனம், ஹரியானாவின் பானிபட்டில் உள்ள இந்தியன் எண்ணெய் உற்பத்திக் கழகத்தில் (IOCL) இந்தியாவின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது
  • இந்தத் திட்டம் சொந்தமாக உருவாக்கி இயக்குதல் (BOO - build-own-operate) என்ற ஒரு அடிப்படையில் செயல்படும்.
  • இது இந்தியன் எண்ணெய் உற்பத்திக் கழகத்திற்கு 25 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 10,000 டன் பசுமை ஹைட்ரஜனை வழங்கும்.
  • இந்த முன்னெடுப்பானது மத்திய அரசின் தேசிய பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இது IOCL நிறுவனத்தின் சுத்திகரிப்புச் செயல்பாடுகளை கரிம நீக்கல் செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஆலை புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி 24 மணி நேரமும் செயல் படும்.
  • மேலும் இது குஜராத்தில் உள்ள ஹசிரா ஆலையில் L&T எலக்ட்ரோலைசர்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்த அதி உயர் அழுத்தக் கார மின்னாற்பகுப்பிகளைக் கொண்டு உள்ளது.
  • இந்தத் திட்டம் இந்தியாவில் ஒரு சுயச் சார்பு மற்றும் குறைந்த கார்பன் தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான ஒரு குறிப்பிடத் தக்கப் படியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்