இந்தியாவின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை
November 19 , 2025 49 days 142 0
கர்நாடகாவின் விஜயநகரில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலையை JSW எனர்ஜி தொடங்கியுள்ளது.
இந்த மையம் JSW ஸ்டீல் நிறுவனத்தின் நேரடி ஆக்சிஜன் நீக்க இரும்பு அலகுக்கு ஆண்டிற்கு 3,800 டன் பசுமை ஹைட்ரஜனையும் ஆண்டிற்கு 30,000 டன் பசுமை ஆக்ஸிஜனையும் வழங்கும்.
இந்திய சூரிய மின் ஆற்றல் கழகத்தின் பசுமை ஹைட்ரஜன் மாற்றத்திற்கான ஒரு மூலோபாயத் திட்டத்தின் (SIGHT திட்டம்) கீழ் JSW எனர்ஜி நிறுவனத்தின் 6,800 டன் ஒதுக்கீட்டின் ஒரு பகுதியாக இந்த விநியோக ஒப்பந்தம் அமைகிறது.
JSW எனர்ஜி மற்றும் JSW ஸ்டீல் ஆகியவை 2030 ஆம் ஆண்டிற்குள் ஆண்டிற்கு 85,000–90,000 டன் பசுமை ஹைட்ரஜன் மற்றும் 720,000 டன் பசுமை ஆக்ஸிஜனை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளன.