இந்தியாவின் மிகப்பெரிய மின்சார வாகன மின்னேற்ற நிலையம்
January 31 , 2022 1296 days 539 0
அரியானாவின் குருகிராமில் டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த, 100 நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒரே நேரத்தில் மின்னேற்றம் செய்யும் வசதியுடன் கூடிய இந்தியாவின் ஒரு மிகப்பெரிய மின்சார வாகன மின்னேற்ற நிலையமானது திறக்கப் பட்டுள்ளது.
இந்தப் புதிய மின்னேற்ற நிலையமானது அலெக்டிரிஃபி பிரைவேட் லிமிடெட் (Alektrify Private Limited) எனும் ஒரு தொழில்நுட்ப முதன்மை நிறுவனத்தினால் உருவாக்கப் பட்டு உள்ளது.
இதற்கு முன்பாக, இந்தியாவின் மிகப்பெரிய மின்சார வாகன மின்னேற்ற நிலையம் நவி மும்பையில் அமைந்திருந்தது.