இந்த அறிக்கையை எரிசக்தி மற்றும் தூய்மையான காற்று ஆராய்ச்சி மையம் (CREA) வெளியிட்டுள்ளது.
காசியாபாத் நகரில், 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியாவில் மிக உயர்ந்த பட்சமாக PM2.5 அளவு பதிவானது.
தேசிய தலைநகரப் பிராந்திய (NCR) நகரங்களில் 20 நகரங்கள் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தினை விட மிக மோசமான மாசுபாட்டைக் கொண்டிருந்ததாக இந்த அறிக்கை குறிப்பிட்டது.
டெல்லி, நொய்டா, பகதூர்கர், கிரேட்டர் நொய்டா மற்றும் பாகபட் ஆகியவை மிகவும் மாசுபட்ட மற்ற NCR நகரங்கள் ஆகும்.
குறைவான பயிர்த் தாளடி எரிப்பு இங்கு இருந்த போதிலும், மாசுபாடு அதிகரிப்பு என்பது மிக முக்கியமாக நகர்ப்புற உமிழ்வு, போக்குவரத்து, தூசி மற்றும் குளிர்கால குளிர்ந்தக் காற்றின் கீழமிழ்தல் காரணமாக ஏற்பட்டது.
ஷில்லாங் (மேகாலயா) PM2.5 பதிவுடன் தூய்மையான நகரமாக உருவெடுத்தது.