மத்திய மின்சார ஆணையம் 20-வது மின்சார ஆய்வு இடைக்கால மதிப்பாய்வை வெளியிட்டது.
இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட மின் திறன் 2026 ஆம் ஆண்டில் சுமார் 520 ஜிகா வாட்டிலிருந்து (GW) 2035-36 ஆம் ஆண்டிற்குள் 1,121 ஜிகாவாட்டாக அதிகரிக்கும் என கணிக்கப் பட்டுள்ளது.
சூரிய ஆற்றல் சுமார் 509 GW உடன் மிகப்பெரிய ஆதாரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலக்கரி ஒரு முக்கிய ஆதாரமாகத் தொடரும் (சுமார் 315 GW) என்பதோடுஇது நீடித்த அடிப்படை மின் விநியோகத்தை வழங்கும்.
புதைபடிவமற்ற எரிபொருளின் பங்கு 2035-36 ஆம் ஆண்டிற்குள் மொத்தத் திறனில் கிட்டத்தட்ட 70% எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.