2025 ஆம் ஆண்டில் இந்தியா 2.2 மில்லியன் டன் மின் கழிவுகளை உருவாக்கியுள்ளது, இது 2017–18 ஆம் ஆண்டில் பதிவான அளவில் இருந்து 150% அதிகரிப்பு ஆகும்.
இது சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய உலகளாவிய உற்பத்தியாளராக மாறியுள்ளது.
இந்த மின் கழிவுகளில் பாதிக்கும் மேற்பட்டவை திறந்தவெளி எரிப்பு மற்றும் அமிலக் கசிவு போன்ற பாதுகாப்பற்ற முறைகளைப் பயன்படுத்தி முறைசாரா முறையில் கையாளப் படுகின்றன என்பதோடு, இதனால் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சுகள் வெளியிடப்படுகின்றன.
முக்கிய நகர்ப்புற மறுசுழற்சி மையங்களில் டெல்லி (சீலம்பூர், முஸ்தபாபாத்), மொராதாபாத் (உத்தரப் பிரதேசம்) மற்றும் பிவாண்டி (மகாராஷ்டிரா) ஆகியவை அடங்கும்.
முறைசாரா மறுசுழற்சி ஈயம், பாதரசம் மற்றும் தீங்கு விளைவிக்கும் துகள்கள் போன்ற நச்சுப் பொருட்களை வெளியிடுகிறது.
சில மறுசுழற்சி மண்டலங்களில் மாசுபாட்டின் அளவு ஆனது உலக சுகாதார அமைப்பின் காற்றுத் தரத்திற்கான பாதுகாப்பான வரம்புகளை விட 12 மடங்கு அதிகமாக உள்ளன.
நச்சுத்தன்மையின் வெளிப்பாடு ஆனது சுவாச நோய்கள், நரம்பியல் சேதம் (குறிப்பாக குழந்தைகளில்), தோல் கோளாறுகள் மற்றும் மரபணு தீங்கு போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
2022 ஆம் ஆண்டு மின்-கழிவு மேலாண்மை விதிகள் இருந்த போதிலும், அவற்றின் அமலாக்கம் தாமதமாக உள்ளது என்ற நிலையில், 2023-24 ஆம் ஆண்டு நிலவரப்படி மின் கழிவுகளில் 43% மட்டுமே முறையாக மறுசுழற்சி செய்யப் படுகிறது.