2024 ஆம் ஆண்டின் இதே காலக் கட்டத்துடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவின் மின்சாரத் துறை உமிழ்வு 1% குறைந்துள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு, இந்தியாவில் உள்ள எந்தவொரு துறையிலும் அரை ஆண்டு கால உமிழ்வு வீழ்ச்சி பதிவாவது இதுவே முதல் முறை ஆகும்.
லேசான கோடை கால வெப்பநிலை மற்றும் வலுவான மழைப்பொழிவு காரணமாக நிலவிய குறைந்த மின் தேவை இந்த சரிவுக்குப் பங்களித்தது.
புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான மின்சாரம் ஆனது, ஒரு மணிநேரத்திற்கு 29 டெராவாட் குறைந்துள்ளது, அதே நேரத்தில் சூரிய, காற்று, நீர் மற்றும் அணுசக்தி உற்பத்தி அதிகரித்துள்ளது.
இந்தியாவில் 25.1 ஜிகாவாட் அளவிலான தூய்மையான எரிசக்தி திறன் புதிதாக உருவாக்கப் பட்டுள்ளது என்பதோடு இது கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் பதிவானதை விட 70% அதிகமாகும்.
தொடர்ச்சியான தூய்மையான எரிசக்தி விரிவாக்கம் காரணமாக இந்தியாவின் மின்சாரத் துறையிலிருந்து உமிழ்வு 2030 ஆம் ஆண்டிற்குள் உச்சத்தை எட்டும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.