இந்தியாவின் மீதான கட்டாயத் தொழிலாளர் சுங்கவரி - அமெரிக்கா
July 28 , 2026 27 days 118 0
விநியோகச் சங்கிலிகளில் கட்டாயத் தொழிலாளர் தொடர்பான கவலைகள் காரணமாக, இந்தியா மற்றும் 16 பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 10% சுங்கவரியை விதித்துள்ளது.
இந்த சுங்கவரியானது அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியால் (USTR), 1974 ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் 301 வது பிரிவின் கீழ் அறிவிக்கப்பட்டது.
கட்டாயத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் இறக்குமதிகளைத் தடைசெய்யும் வகையில் தனது வெளியுறவு வர்த்தகக் கொள்கையை இந்தியா திருத்தியமைத்ததைத் தொடர்ந்து, இது 10% என்ற குறைந்த சுங்கவரி அடுக்கில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் கீழ் மொத்தம் 60 பொருளாதார நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன; 17 நாடுகள் 10% சுங்கவரியையும், 43 நாடுகள் 12.5% சுங்கவரியையும் எதிர்கொள்கின்றன.
எரிபொருள், உரங்கள், மருந்துகள் மற்றும் தற்போதைய வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள பொருட்கள் போன்ற சில பொருட்களுக்கு இந்த சுங்கவரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன.