TNPSC Thervupettagam

இந்தியாவின் மீதான கட்டாயத் தொழிலாளர் சுங்கவரி - அமெரிக்கா

July 28 , 2026 9 hrs 0 min 32 0
  • விநியோகச் சங்கிலிகளில் கட்டாயத் தொழிலாளர் தொடர்பான கவலைகள் காரணமாக, இந்தியா மற்றும் 16 பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 10% சுங்கவரியை விதித்துள்ளது.
  • இந்த சுங்கவரியானது அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியால் (USTR), 1974 ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் 301 வது பிரிவின் கீழ் அறிவிக்கப்பட்டது.
  • கட்டாயத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் இறக்குமதிகளைத் தடைசெய்யும் வகையில் தனது வெளியுறவு வர்த்தகக் கொள்கையை இந்தியா திருத்தியமைத்ததைத் தொடர்ந்து, இது 10% என்ற குறைந்த சுங்கவரி அடுக்கில் வைக்கப்பட்டுள்ளது.
  • இந்த நடவடிக்கையின் கீழ் மொத்தம் 60 பொருளாதார நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன; 17 நாடுகள் 10% சுங்கவரியையும், 43 நாடுகள் 12.5% சுங்கவரியையும் எதிர்கொள்கின்றன.
  • எரிபொருள், உரங்கள், மருந்துகள் மற்றும் தற்போதைய வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள பொருட்கள் போன்ற சில பொருட்களுக்கு இந்த சுங்கவரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்