இந்தியாவின் முக்கியப் புள்ளி விவரங்கள் அறிக்கை 2023
October 17 , 2025 15 hrs 0 min 20 0
2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் 2.52 கோடி ரூபாய் பிறப்புகள் பதிவானது, இது 2022 ஆம் ஆன்டில் பதிவானதை விட சுமார் 2.32 லட்சம் குறைவாகும்.
2023 ஆம் ஆண்டில் 86.6 லட்சம் இறப்புகள் பதிவாகின, இது 2022 ஆம் ஆண்டில் பதிவான 86.5 லட்சம் இறப்புகளிலிருந்து ஓரளவிலான அதிகரிப்பினைக் குறிக்கிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில், பிறப்பின் போதான மிகக் குறைந்த பாலின விகிதம் 899 ஆகவும், அதைத் தொடர்ந்து பீகார் 900 ஆகவும், தெலுங்கானா 906 ஆகவும், மகாராஷ்டிரா 909 ஆகவும், குஜராத் 910 ஆகவும், ஹரியானா 911 ஆகவும், மிசோரம் 911 ஆகவும் பதிவாகியுள்ளது.
2020 ஆம் ஆண்டு முதல், பீகார் மாநிலத்தில் மிகக் குறைந்த பாலின விகிதம் பதிவாகி வருகிறது.
1,085 என்ற விகிதத்தில் அருணாச்சலப் பிரதேசத்தில் அதிக பாலின விகிதம் பதிவாகி உள்ளது.
அதைத் தொடர்ந்து நாகாலாந்து மாநிலத்தில் 1,007 ஆகவும், கோவாவில் 973 ஆகவும், லடாக் மற்றும் திரிபுராவில் முறையே 972 ஆகவும், கேரளாவில் 967 ஆகவும் பதிவாகி உள்ளன.
மொத்தப் பதிவு செய்யப்பட்ட பிறப்புகளில் மருத்துவமனைகளில் பதிவான பிறப்புகளின் பங்கு 2023 ஆம் ஆண்டில் 74.7% ஆகும்.
2023 ஆம் ஆண்டிற்கான ஒட்டு மொத்தப் பிறப்பு பதிவு 98.4% ஆக இருந்தது.