இந்தியத் தெற்கு மத்திய ரயில்வே மண்டலமானது 13 எரிசக்தி - சமநிலை நிலையங்களைக் கொண்ட இந்தியாவின் முதலாவது மண்டலமாக உருவெடுத்து உள்ளது.
இந்த எண்ணிக்கையானது இந்திய ரயில்வே அமைப்பு முழுவதும் உள்ள அனைத்து மண்டலங்களுக்கிடையேயும் மிக அதிகமாக உள்ளது.
எரிசக்தி – சமநிலை இரயில் நிலையங்கள் 100% ஆற்றல் தேவைகளை சூரிய ஒளி மின்னழுத்தத் தகடுகள் மூலம் பூர்த்தி செய்யும் திறன் கொண்டவையாகும். இவை ரயில் நிலையக் கட்டிடங்களில் பொருத்தப் பட்டுள்ளன.