TNPSC Thervupettagam

இந்தியாவின் முதலாவது காடுகள் சான்றளிப்புத் திட்டம்

March 23 , 2019 2304 days 726 0
  • உலக அளவில் இந்தியா தற்பொழுது பிரத்தியேகமாக இந்தியக் காடுகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட காடுகள் என்ற சான்றளிப்புத் திட்டத்தைப் பெற்றுள்ளது.
  • இந்தியாவைச் சேர்ந்த இலாப நோக்கில்லா நிறுவனமான காடுகளின் பாதுகாப்பு மற்றும் சான்றளிப்பு அமைப்பானது இந்தியாவில் இத்திட்டத்தைச் செயற்படுத்தும் நிறுவனமாகும்.
  • இது இந்தியாவில் உள்ள காடுகள், காடுகளில் இருந்து பெறப்படும் பொருட்கள் மற்றும் நீடித்த மேலாண்மை ஆகியவற்றிற்கான தரங்களை நிர்ணயிக்கும்.
  • பல்வேறு வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டிற்குள் சான்றளிக்கப்படாத மரக்கட்டைகள், மரக் கட்டைகள் அற்ற காடுகளில் இருந்து பெறப்படும் பொருட்கள் மற்றும் மரம் சார்ந்த பொருட்கள் ஆகியவற்றின் மீது இறக்குமதி மீதான வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
  • எனவே, ஏற்றுமதி செய்வதற்கு நீடித்த காடுகள் மேலாண்மைச் சான்றுகள் பெறுவது கட்டாயமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்