இந்தியாவின் முதலாவது தனியார் திரவ இயற்கை எரிவாயு உற்பத்தி மையம் – நாக்பூர்
July 14 , 2021 1659 days 748 0
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் நாக்பூரில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதலாவது தனியார் திரவ இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தினைத் திறந்து வைத்தார்.
இந்த உற்பத்தி மையமானது ஆயுர்வேத மருந்து உற்பத்தியாளரான பைத்யநாத் ஆயுர்வேதக் குழுமத்தினால் அமைக்கப்பட்டது.
திரவ இயற்கை எரிவாயு என்பது பெருமளவில் மீத்தேனையும் (CH4) சிறிதளவு ஈத்தேனையும் (C2 H2) கொண்ட ஒரு இயற்கை எரிவாயு ஆகும்.
இது மணமற்ற, நிறமற்ற, விஷத்தன்மையற்ற மற்றும் கரிச்சிதைவிற்குட்படாத (non-corrosive) ஒரு வாயுவாகும்.