இந்தியாவின் முதலாவது நிதியியல் கட்டுப்பாட்டு மையம்
October 11 , 2020 1799 days 751 0
Chqbook.com ஆனது இந்தியாவின் முதலாவது நிதியியல் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடங்கியுள்ளது.
இது சிறு வர்த்தக உரிமையாளர்களை ஊக்கப்படுத்துவதற்கான ஒரு புதிய கைபேசித் தளமாகும்.
இது தினசரி நிதியியல் சேவைகளை நிர்வகிப்பதற்கான தீர்வையும் நிதியியல் பொருட்களை அணுகுவதற்கான சேவைகளையும் வழங்க உள்ளது.
Chqbook.com என்பது நடப்புக் கணக்கு, காட்டா, கடன் வழங்கல், காப்பீடு மற்றும் வெகுமதிகள் ஆகிய 5 கூறுகளின் மூலம் உலகத் தரம் வாய்ந்த நிதியியல் சேவைகளை வழங்கும் சிறு வர்த்தக உரிமையாளர்களுக்கான இந்தியாவின் முதலாவது நியோ வங்கியாகும்.