இந்தியாவின் முதலாவது நிலக்கரி - வளிமயமாக்கல் உரத்தொழிற்சாலை
September 23 , 2018 2644 days 868 0
இந்தியாவின் முதலாவது ‘Pet Coke’ எனப்படும் கரி கலப்புடன் கூடிய நிலக்கரி - வளிமயமாக்கலை அடிப்படையாகக் கொண்ட உரத் தொழிற்சாலையின் தொடக்கப் பணியை பிரதம அமைச்சர் (செப்டம்பர் 22) தொடங்கி வைத்தார். இந்த உரத் தொழிற்சாலை ஒடிஸாவின் தால்ச்சரில் அமைக்கப்படவிருக்கிறது.
நிலக்கரி வளிமயமாக்கலை அடிப்படையாகக் கொண்ட உரத் தொழிற்சாலையானது தால்ச்சர் உரங்கள் நிறுவனத்தால் மேம்படுத்தப்படுகிறது.
இப்பணிகள் முடிவடைந்தால், இந்த தொழிற்சாலையானது ஆண்டுக்கு27 மில்லியன் மெட்ரிக் டன்கள் (MMTPA - Million Metric Tonne Per Annum) வேம்பு பூசப்பட்ட யூரியா கட்டிகளை உற்பத்தி செய்யும் திறன் பெற்றது.
வேம்பு பூசப்பட்ட யூரியாவானது மண்ணில் ஏற்படும் நைட்ரஜன் அரிப்பைக் குறைக்கிறது. மேலும் யூரியாவை விவசாயப் பயன்பாட்டில் இருந்து வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்படுவதை கண்காணிக்கிறது.
இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடு போன்ற மாசுபடுத்திகள் யூரியா மற்றும் இதர துணைப் பொருட்களை தயாரிப்பதற்காக மறுசுழற்சி செய்யப்படும்.