இந்தியாவின் முதலாவது நீதி நகரம் - ஆந்திரப் பிரதேசம்
November 3 , 2018 2552 days 888 0
ஆந்திரப் பிரதேசம் மாநிலமானது நீதித்துறை அமைப்பிற்கு உதவுவதற்காக மாநிலத் தலைநகரான அமராவதியில் உலகத் தரம் வாய்ந்த, இந்தியாவின் முதலாவது ‘நீதி நகரை’ கட்டமைத்து வருகிறது.
ஒருங்கிணைந்த நீதி மையத்தைக் கொண்டதாக அமராவதியில் ‘நீதி நகரத்தை’ APCRDA (ஆந்திரப் பிரதேச தலைநகர வளர்ச்சி ஆணையம்/ Andhra Pradesh Capital Region Development Authority) கட்டமைத்து வருகிறது. இந்த நகரமானது தோராயமாக 2.5 லட்சம் மக்கள் தொகையுடன் 3,309 ஏக்கர் அளவில் பரவியுள்ளது.
இந்த நீதி நகரமானது 1.3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.