இந்தியாவின் முதலாவது நீருக்கடியிலான அருங்காட்சியகம்
December 14 , 2018 2353 days 753 0
நாட்டின் முதலாவது நீருக்கடியிலான அருங்காட்சியகத்தை அமைப்பதற்காக இந்தியக் கப்பற் படையிலிருந்து ஓய்வு பெற்ற பாண்டிச்சேரி வகுப்புக் கப்பலான “ஐஎன்எஸ் கடலூரை” பாண்டிச்சேரிக்கு அன்பளிப்பாக அளிக்க இந்தியக் கடற்படை ஒப்புக் கொண்டுள்ளது.
இக்கப்பலை நீருக்கடியிலான கடல்சார் அருங்காட்சியகமாக பயன்படுத்துவதற்காக பாண்டிச்சேரிக் கடற்கரையிலிருந்து 7 கி.மீ. தொலைவிற்கு இக்கப்பல் அனுப்பப் படவிருக்கிறது. இது கடலுக்கு அடியில் 26 மீ ஆழத்தில் நிலை நிறுத்தப்படவிருக்கிறது.
இது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த உதவும்.
2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இக்கப்பலானது இந்தியக் கப்பற் படையிலிருந்து ஓய்வு பெற்றது.