இந்தியாவின் முதலாவது மாவட்ட குளிர்விக்கும் அமைப்பு
February 20 , 2019 2368 days 768 0
இந்தியாவின் முதலாவது மாவட்டக் குளிர்விக்கும் அமைப்பானது ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரான அமராவதியில் அமையவிருக்கிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையாகக் கொண்டு செயல்படும் சர்வதேச குளிர்விக்கும் அமைப்பை வழங்குநரான “தப்ரீட்” ஆனது மாவட்ட குளிர்விக்கும் அமைப்பைக் கட்டமைத்து, நிர்வகித்து, செயல்படுத்தி மற்றும் மாற்றுவதற்காக ஆந்திரப் பிரதேச அரசுடன் ஒரு 30 ஆண்டுகால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
மாவட்ட குளிர்விக்கும் அமைப்புகள் மைய ஆலைகளில் குளிர்விக்கப்பட்ட நீர், நீராவி மற்றும் சூடான நீர் ஆகியவற்றை உற்பத்தி செய்து, அதன் மூலம் வெளிப்படும் ஆற்றலை குழாய்களின் மூலம் குளிரூட்டுவதற்காக கட்டிடங்களுக்கு அனுப்புகின்றன.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சட்டமன்றம், உயர்நீதிமன்றம், தலைமைச் செயலகம் மற்றும் இதர அரசு அலுவலகக் கட்டிடங்கள் ஆகியவற்றின் குளிர்விக்கும் தேவைகளை இந்த அமைப்பு பூர்த்தி செய்யும்.
இந்த மாவட்டக் குளிர்விக்கும் அமைப்பானது நகரக் கட்டிடங்களைக் குளிர்விப்பதற்காக 50 சதவிகித அளவிற்கு முதன்மை ஆற்றல் நுகர்வை மட்டுமே பயன்படுத்தும்.