தில்லி-மும்பை விரைவுப் பாதையானது வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருப்பதற்காக வேண்டி இந்தியாவின் முதலாவது விலங்குப் பாலங்கள் அல்லது விலங்குகள் கடந்து செல்லும் நடைபாதையினைப் பெற இருக்கின்றது.
ராஜஸ்தானில் உள்ள முகுந்தரா மற்றும் ரந்தம்போர் வனவிலங்குச் சரணாலயங்களை இணைக்கும் வகையில் உள்ள இந்த பரிந்துரைக்கப்பட்ட பெருவழிப் பாதையில் ரந்தம்போர் வனவிலங்குப் பெருவழிப் பாதையின் ஒரு பிரிவானது சேர்க்கப்பட இருக்கின்றது.
இந்தப் பெருவழிப் பாதையானது இந்தியாவின் தலைநகரான தில்லியை இந்தியாவின் வணிகத் தலைநகரான மும்பையுடன் இணைக்க இருக்கின்றது.
இந்தப் பெருவழிப் பாதையானது 2.5 கிலோ மீட்டருக்கு மேலான ஒட்டுமொத்த நீளத்துடன் விலங்குகள் கடந்துச் செல்லும் 5 நடைபாதையினைப் பெற இருக்கின்றது.
விலங்குகள் ஒவ்வொரு 500 மீட்டர் இடைவெளியிலும் ஒரு நடைபாதை வழியைப் பெற இருக்கின்றன.
மேலும் அவை அந்தப் பெருவழிப் பாதையில் 3-4 மீட்டர்கள் அளவில் ஒலித் தடுப்புச் சாதனங்களுடன் 8 மீட்டர்கள் அளவிற்கு ஒரு எல்லைச் சுவரைப் பெற இருக்கின்றன.