TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் 5G சோதனை அமைப்பு

May 22 , 2022 1113 days 554 0
  • இந்தியாவின் முதல் 5ஜி சோதனை அமைப்பினைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • இது தொடக்க நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் தங்களது தொழில் நுட்பங்களை உள்நாட்டிலேயே சோதித்து சான்றிதழைப் பெறுவதற்கு வழி வகுக்கிறது.
  • மேலும் இதற்காக வெளிநாட்டு வசதிகளை சார்ந்திருக்கும் நிலையை இது குறைக்கச் செய்கிறது.
  • 5G சோதனை அமைப்பானது, முக்கியமான மற்றும் நவீனத் தொழில்நுட்பங்களில் தன்னிறைவினை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றப் படியாகும்.
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் கீழான எட்டு நிறுவனங்களுக்கிடையேயான ஒரு கூட்டுத் திட்டமாக 5ஜி சோதனை அமைப்பானது உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்