இந்தியாவின் முதல் AI அடிப்படையிலான சாலை பாதுகாப்பு திட்டம்
August 3 , 2025 19 days 87 0
சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக என்று உத்தரப் பிரதேசத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பெரியத் தரவு பகுப்பாய்வு முன்னோடி திட்டத்தினை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.
இந்தத் திட்டமானது, ITI லிமிடெட் மற்றும் mLogica ஆகியவற்றினால் செலவில்லாமல் செயல்படுத்தப்படுகிறது.
வாகன தகவல் தொடர்பு மற்றும் வானிலை தகவல்கள் உள்ளிட்ட பல மூல தரவுகளைப் பயன்படுத்தி விபத்துகளைக் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது அமலாக்கம், இயங்கலை வழி உரிமம் வழங்கல், அனுமதிகள், வருவாய் அமைப்புகள், இணைய ரசீது/சலான் செயல்பாடுகள் மற்றும் 'வாகன் சாரதி' வாகனப் பதிவேட்டை மேம்படுத்தும்.
இந்தத் திட்டமானது நல்ல சட்ட இணக்கம் மற்றும் தரவுத் தனியுரிமைகள் குறித்த தொடர்ச்சியான தணிக்கைகளுடன் மோட்டார் வாகனச் சட்டம், 1988 மற்றும் மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989 ஆகியவற்றுடன் முழுமையாக இணங்குகிறது.