இந்தியாவின் முதல் அரசு மருத்துவமனையை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) மருத்துவமனை, கிரேட்டர் நொய்டாவில் உள்ள அரசு மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (GIMS) தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையை இந்திய அரசின் சுகாதாரச் சேவைகள் பிரிவின் கூடுதல் தலைமை இயக்குநர் காணொளி வழியாக திறந்து வைத்தார்.
இது GIMS மருத்துவப் புத்தாக்க மையத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனை AI அடிப்படையிலான சுகாதாரத் தீர்வுகளைச் சோதித்துப் பயன்படுத்துவதற்கான உண்மையான மருத்துவ அமைப்பை வழங்குகிறது.
இது மருத்துவக் காட்சி உருவகம் சார் ஆய்வு மற்றும் மருத்துவ முடிவு ஆதரவு அமைப்புகள் போன்ற பகுதிகளில் கவனம் செலுத்துகிறது.