TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் CKD பதிவேடு

January 20 , 2026 14 hrs 0 min 14 0
  • மார்ச் 31, 2026 ஆம் தேதிக்குள் விரிவான நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD) பதிவேட்டைத் தொடங்கும் முதல் இந்திய மாநிலமாக ஒடிசா மாற உள்ளது.
  • இந்தப் பதிவேடு, CKD பரவல் குறித்த நம்பகமானத் தரவை உருவாக்கும் மற்றும் ஆதார அடிப்படையிலான கொள்கை வகுப்பிற்கு உதவும்.
  • தேசியத் தகவல் மையம் (NIC) இந்தப் பதிவேட்டிற்காகப் பிரத்தியேக மென்பொருளை உருவாக்கி வருகிறது.
  • இந்தப் பதிவேடு, ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவக் கல்லூரிகள் வரையிலான CKD பாதிப்புகளை உள்ளடக்கி, ஏற்கனவே உள்ள தரவுகளில் உள்ள இடைவெளிகளை நிரப்பும்.
  • ஒடிசாவில் CKD பாதிப்பு 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 14% ஆகும் என்ற நிலையில் சுமார் 60% பாதிப்புகள் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்புடையவையாக உள்ளன.
  • கடந்த மூன்று ஆண்டுகளில் ஒடிசாவில் 19,888 CKD பாதிப்புகளும் 4,718 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்