இந்திய தரநிலைகள் வாரியம் (BIS) ஆனது, அதன் உற்பத்தி மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக இந்தியாவின் முதல் அகர்பத்தி (தூபக் குச்சி) தரநிலையை அறிவித்துள்ளது.
IS 19412:2025 என பெயரிடப்பட்டுள்ள இந்தத் தரநிலை அகர்பத்திப் பொருட்களுக்கு ஒரு சீரான தேசியக் கட்டமைப்பை வழங்குகிறது.
இது டிசம்பர் 24 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படும் 2025 ஆம் ஆண்டு தேசிய நுகர்வோர் தினத்தன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்தத் தரநிலை தீங்கு விளைவிக்கும் மற்றும் நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்து, வீடுகள் மற்றும் பொது இடங்களில் அதன் பாதுகாப்பானப் பயன்பாட்டை உறுதி செய்கிறது.
இது அகர்பத்தி உற்பத்திக்கான தரம், பாதுகாப்பு, மூலப்பொருள் மற்றும் செயல்திறன் தேவைகளை வகுக்கிறது.