TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் அணியக் கூடிய பண வழங்கீட்டு வசதி

October 18 , 2025 15 hrs 0 min 18 0
  • சென்னையின் இந்தியத் தொழிநுட்பக் கல்விக் கழகம் மூலம் காப்பு செய்யப்பட மியூஸ் வியரபல்ஸ் நிறுவனமானது இந்தியாவின் முதல் அணியக்கூடிய வகையிலான பண வழங்கீட்டு சூழல் அமைப்பை அறிமுகப்படுத்துவதற்கு இந்திய தேசியக் கொடுப்பனவுக் கழகத்துடன் (NPCI) கூட்டு சேர்ந்துள்ளன.
  • இந்த அமைப்பானது, பயனர்கள் NFC (அருகமைந்த தகவல் தொடர்பு) மூலம் இயக்கப் பட்ட POS முனையங்களின் மீது தட்டுவதன் மூலம் 'Ring One' என்ற ஸ்மார்ட் மோதிரத்தினைப் பயன்படுத்தி பணம் செலுத்த உதவுகிறது.
  • பரிவர்த்தனைகளுக்கு தொலைபேசி, அட்டை அல்லது பண சேமிப்புத் தளம் எதுவும் தேவையில்லை என்பதோடு மேலும் இந்த மோதிரம் அணிந்திருக்கும் போது மட்டுமே பணம் செலுத்த முடியும்.
  • மியூஸ் வாலட் ஆனது எந்த RuPay அட்டையையும் இந்த மோதிரத்திற்குள் உள்ள செக்யூர் எலிமென்ட் (SE) சில்லில் சேமிக்கப்பட்ட குறியீடாக மாற்றுவதற்கு RuPay அட்டை அமைப்பைப் பயன்படுத்துகிறது.
  • SE சில்லு வன்பொருள் நிலையிலான பாதுகாப்பை உறுதி செய்வதோடு, தொலைபேசி அல்லது செயலிகளிலிருந்து அட்டைத் தரவைத் தனிமைப்படுத்துகிறது.
  • இந்த தளமானது, குறிப்பாக இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள பயனர்களுக்குப் பாதுகாப்பான டிஜிட்டல் கட்டணங்களை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த மோதிரம் அகற்றப்பட்டால், தொலைந்து விட்டால் அல்லது திருடப் பட்டால், பரிவர்த்தனைகள் ஆனது பாதுகாப்பிற்காக உடனடியாக முடக்கப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்