இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை (Fast Breeder Reactor)
September 23 , 2018 2590 days 960 0
தமிழ்நாட்டில் கல்பாக்கத்தில் இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 500 மெகாவாட் சக்தி உடைய முன்மாதிரி வேக ஈனுலையானது 2019 ஆம் ஆண்டில் உயர் செயல்திறனை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
உயர் செயல்திறன் என்கின்ற நிகழ்வு அணுஉலை நீடித்த சங்கிலித் தொடர் எதிர்வினையை அடையும் நிகழ்வாகும். அதாவது அணு உலையின் மையப் பாகத்தில் வெளிப்புற நியூட்ரான்கள் தேவைப்படாமல் அணுப்பிளவை தக்கவைக்கும் நிகழ்வாகும்.
இந்த அணு உலை இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தால் உள்நாட்டுத் தொழில் நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டது.
இது புளுட்டோனியம் மற்றும் யுரேனியம் ஆகியவற்றின் கலவையான MOX எரிபொருளை (PuO2 & UO2) எரித்து மின்சக்தியை உருவாக்குகின்றது.
இது 1750 டன்கள் சோடியத்தை குளிர்விப்பானாகக் கொண்ட குளம் போன்ற வடிவிலான அணு உலையாகும்.