TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் உள்நாட்டு மீன்வளம்

June 30 , 2025 12 hrs 0 min 18 0
  • இந்தியாவிலேயே முதன்முறையாக, சிலிக்கா ஏரியில் கழி/சேற்று நண்டு பிடித்தலுக்கு உலகளாவிய ஒரு நிலைத் தன்மை அங்கீகாரத்தைப் பெறுவதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப் பட்டு வருகின்றன.
  • சிலிக்காவின் கழி நண்டு பிடித்தலுக்கு என கடல்சார் மேற்பார்வையாளர் சபை (MSC) சான்றிதழைப் பெறுவதற்கான கூட்டு முன்னெடுப்பு தொடங்கியுள்ளது.
  • இந்த மீன்வளமானது, வடகிழக்கு இந்தியாவில் பொருளாதார ரீதியாகவும் சுற்றுச் சூழல் ரீதியாகவும் முக்கியமானதாகும்.
  • இது MSC சான்றிதழுக்குப் பரிசீலிக்கப்படும் இந்தியாவின் முதல் உள்நாட்டு மீன் வளம் ஆகும்.
  • MSC என்பது ஒரு நிலையான மீன் பிடித்தலை ஊக்குவித்து, சான்றளிக்கும் ஒரு முக்கிய உலகளாவியத் திட்டமாகும்.
  • சிலிக்கா ஏரியானது இந்தியாவின் மிகப்பெரியக் கடலோரக் காயலாகும் என்பதோடு  மேலும் யுனெஸ்கோ அமைப்பினால் அங்கீகரிக்கப் பட்ட பல்லுயிர்ப் பெருக்க மையம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்